மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடிகை மஞ்சுவாரியார் நடிக்க உள்ளதாக தகவல்

சென்னை: ஆர்யா கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாக இருக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு மிஸ்டர் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான FIR திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் திபு நிபுணன் தாமஸ் என்பவரின் இசையிலும் இப்படம் உருவாக உள்ளது.ஆக்சன் திரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் கௌதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கிய நிலையில் உகாண்டா, செர்பியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவரும் என கூறப்படுகிறது.

இதன் கூடுதல் தகவலாக, ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இவர்களுடன் இணைந்து அசுரன், துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இது சம்பந்தமான மற்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.