அஜித்தின் ஏகே 62 படத்தில் சிறப்பு தோற்றத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பதாக தகவல்

சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தில் கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கோலிவுட் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் 11 - ம் தேதி வெளியாகிறது.

இதையடுத்து நானும் ரவுடி தான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் என வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62ம் படத்தை இயக்கப் போகிறார். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்கும் நிலையில் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

ஏகே 62 படத்தில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி அஜித்திற்கு வில்லனாக நடிக்க போகிறார் என சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

தற்போது கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி வருகிறது.