நானே வருவேன் படத்தின் காலை 4 மணி காட்சி ரத்து என தகவல்

சென்னை: காலை 4 மணி காட்சி ரத்தாம்... நடிகர் தனுஷ் நடிப்பில் செப்.29ல் வெளியாகும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் காலை 4 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மயக்கம் என்ன படத்துக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் இந்துஜா, எல்லி ஏவிஆர்ராம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு படத்தை தயாரிக்கிறார்.