ஜப்பான்’ படம் குறித்து பேசிய அதன் தயாரிப்பாளர்

கார்த்தி படங்கள் வெளியாகும் அதே தினத்தில் வேறு நடிகர்களின் திரைப்படங்களும் வெளியானல் கூட அந்த படங்களை மிஞ்சும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்து கிளாசில் கார்த்தியின் படங்கள் வெற்றி அடைந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கைதி மற்றும் விஜயின் பிகில் ஒரே தினத்தில் வெளியானது இதில் பிகில் பெரிய அளவில் வசூலை ஈட்டினாலும் படத்தின் பட்ஜெட் அதிகம். ஆனால் கைது படத்தின் பட்ஜெட் மிக குறைவு ஆனால் வசூலை அள்ளி குவித்தது 100 கோடி.

அதே போன்று தான் சமீபத்தில் கார்த்தி சர்தார் படத்தை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் வெளியிட்டார் அதில் பிரின்ஸை விட பல கோடிகள் வசூல் செய்து சர்தார் திரைப்படம் வெற்றி அடைந்தது. இந்நிலையில் அதே போல தான் இந்த ஆண்டு தீபாவளிக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ,ரைடு, உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

ஜப்பான் திரைப்படப்பும் அதே தினத்தில் வெளியாகதால் கண்டிப்பாக ஜப்பான் திரைப்படம் வெற்றி அடையும் என படக் குழுவினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு எத்தனை படங்கள் வெளியாகிறது என்றாலும் கவலை இல்லை என்று ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து பேசிய அவர் ” தீபாவளி அன்று 2 படங்கள் வெளியாகிறது. அதில் மூன்றாவதாக ஒரு படம் ரிலீசானாலும் கவலையில்லை ஏனென்றால், படத்தின் கதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக வெற்றிபெறும். பல படங்கள் தீபாவளி அன்று வெளியாவதால் போதிய திரையரங்குகளும், காட்சிகளும் ஜப்பான் படத்திற்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன். எத்தனை திரையரங்குகள் கிடைக்கிறது என்பதைவிட எத்தனை பேர் படத்தை விரும்புகிறார்கள் என்பதில்தான் வெற்றி இருக்கிறது” என எஸ்.ஆர்.பிரபு தெரிவித்து உள்ளார்.