ஜெயிலர் பாக்ஸ் ஆபிசில் ரூ. 600 கோடியை கடந்து வசூல்

25 நாட்களாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் தமிழக வசூலை ஈட்டி கொண்டு வருகிறது. 2.0 படத்திற்கு பின் பாக்ஸ் ஆபிசில் ரூ. 600 கோடியை கடந்து வசூல் செய்துள்ள தமிழ் படம் என்ற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது.

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக ரஜினிக்கும், நெல்சன் திலீப்குமாருக்கும்ட விலைஉயர்ந்த சொகுசு காரை ஒன்றை பரிசாக கொடுத்தார் தயரிப்பாளர் கலாநிதி மாறன்.

இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி விரைவில் அமையும் என்று கூறப்படுகிறது. ஜெயிலர் 2வாக கூட அந்த படம் இருக்கக்கூடும் என தகவல் உலா வருகிறது.


இதையடுத்து உலகளவில் ரூ. 600 கோடியை கடந்துள்ள ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் தமிழகத்தில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த ஜெயிலர் படம், 25 நாட்களை கடந்துள்ள நிலையில், ரூ. 195 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளது.

வருகிற 7ம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையிலும், ஜெயிலர் படத்திற்கு திரையரங்கில் பெரும் வரவேற்பு கூடியுள்ளது