ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

சென்னை: ஜெயம் ரவியின் அகிலன் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் திரைப்படம் ‘அகிலன்’. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘அகிலன்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழுவிடம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.