மருதநாயகத்தை இயக்குகிறார் கமல்... ஹீரோ சூர்யாவா? விக்ரமா!!!

சென்னை: மருதநாயகம் படம் மீண்டும் எடுக்கப்பட உள்ளதாம். ஆனால் ஹீரோ கமல்ஹாசன் இல்லையாம். வேற ஹீரோவை வைத்து எடுக்கப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் இயக்கி நடித்து வெளிவருவதாக இருந்த திரைப்படம் மருதநாயகம். கிட்டத்தட்ட 35 சதவீதம் படமாக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக மருதநாயகம் அப்படியே நின்றுபோனது.

மீண்டும் மருதநாயகம் எப்போது படமாக்கப்பட்டு திரைக்கு வரும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் கூட கமல் ஹாசன் அளித்திருந்த பேட்டி ஒன்றில் விரைவில் மருதநாயகம் துவங்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். ஆனால், கமல்ஹாசன் இப்படத்தில் நடிக்கமாட்டார் என தெரிகிறது.

படத்தை இயக்கும் பொறுப்பை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கமல்ஹாசன், இப்படத்திற்கு சூர்யா அல்லது விக்ரமை ஹீரோவாக போட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.