குறும்படம் போட்டு பாலாஜிக்கு குட்டு வைத்தார் கமல்

தான் செய்ததை இல்லவே இல்லை என்று கூறி பிறர் மீது பழியை போட்ட பாலாஜிக்கு குறும்படம் போட்டு குட்டு வைத்துள்ளார் கமல்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின், வார இறுதி நாட்களின் எபிசோடுகளை பார்ப்பதற்காக தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏனென்றால் இந்த எபிசோடுகளில் கமல் பேசும் விதம் தாறுமாறாக இருக்கும்.

மேலும் கமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பஞ்சாயத்துகளை கட்டன் ரைட்டாக பேசி தீர்த்து வைப்பார். அந்தவகையில், நேற்றைய எபிசோடில் பாலாஜிக்கு ஒரு குறும்படத்தை போட்டு அவரை கொத்து புரோட்டா போல் ஆக்கி விட்டார் கமல்.

அதாவது, சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாலாஜி தான் செய்த தவறை ஒத்துக் கொள்ளாமல் பிடிவாதமாக பேசிக்கொண்டே இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று கூற, பாலாஜி அதற்கு எதிர்மறையாகவே நின்று, தான் விளையாடியது தான் கரெக்ட் என்று நீண்ட நேரமாக வாக்குவாதம் செய்தார். மேலும் ஆரி வேண்டுமென்றே மாறிமாறி பேசுவதாக அவர் மீதும் பழி போட்டார் பாலா.

இதைப்பற்றி நேற்றைய எபிசோடில் விசாரித்த கமல், பாலாஜிக்காக ஒரு குறும்படத்தை போட்டு, அவரை விளாசி விட்டார். இந்த குறும்படத்தில் பாலாஜி செய்த தவறு தெளிவாக தெரிய வந்தது. இதனால் பாலாஜி இந்த வாரம் இல்லாவிட்டாலும், அடுத்த வாரம் கண்டிப்பாக வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.