சந்திரமுகி-2வில் நடிக்க கங்கனா ரணாவத் ரூ.20 கோடி சம்பளமாம்

சென்னை: சந்திரமுகி-2வில் நடிக்க கங்கனா ரணாவத் ரூ.20 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2005 -ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் சந்திரமுகி 2. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் ராகவ லாரன்ஸ் நடிப்பில் திரைப்படம் உருவாகி உள்ளது.

முன்னதாக இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் படக்குழு திடீரென தள்ளி வைத்து இதன் வெளியீடு நாளை (28ம் தேதி)க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்திற்காக கங்கனா ரனாவத் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளாராம். அதிலும் இப்படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸ் காட்டிலும் கங்கனா ரனாவத் அதிகம் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.