வசூலில் 500 கோடியை தாண்டிய லியோ

ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் ...லியோ படத்தின் வசூல் அனைவரையும் மிரள வைத்து வருகிறது என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி வசூல் செய்திருந்தது. அதைப்போன்று கேரளாவில் மட்டும் முதல் நாளில் 12 கோடி வசூல் செய்திருந்தது. முதல் நாளில் இருந்தே இப்படி தொடர்ச்சியாக படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்த நிலையில், லியோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், வெளியான ஒரு வாரத்தில் படம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து வெளியான 1 வாரத்தில் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வது என்பது தமிழ் சினிமாவில் சாதாரண விஷயம் இல்லை அதனை லியோ படம் செய்துள்ளது தமிழ் சினிமாவையே பெருமை படுத்தியுள்ளது.

லியோ திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜயின் சினிமா வாழ்க்கையில் 500 கோடி வசூல் கொடுத்த திரைப்படம் மற்றும் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. அதைப்போல இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த படம் மற்றும் கேரளாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்ததுள்ளது.