விஷால் பிறந்த நாளை ஒட்டி மார்க் ஆண்டனி பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: நடிகர் விஷால் பிறந்தநாளுக்காக... ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
'திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. சிம்பு சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தப் படம் தோல்வியடைந்ததாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து பிரபு தேவா நடிப்பில் பகீரா என்ற படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.

'மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக இன்று விஷால் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்த நாள் பரிசு அளிக்கும் விதமாக படக்குழு மார்க் ஆண்டனி பட முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது.