கல்யாணமா ? சிம்பு தரப்பு விளக்கம்

நடிகர் சிலம்பரசன் 39 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி கொண்டு வருகிறார். இதனால் என்னவோ அவருடைய திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் நடிகர் சிம்பு விரைவில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், அவருடைய தந்தையும், தாயும் அவருக்கு பொண்ணு பார்த்துள்ளார்கள் என்றும், சிம்புவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் பரவியது.

இதையடுத்து இதற்கு சிம்பு தரப்பிலிருந்து மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிம்புவின் மேலாளர் தரப்பிலிருந்து வெளியிடபட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம்.

அதில் எவ்வித உண்மையுமில்லை. திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் பற்றிய செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் தகவலை உறுதி செய்த பின்னர் வெளியிட வேண்டுகிறோம். அப்படி ஒருவேளை திருமணம் பற்றிய தகவல் உறுதியானால் நாங்களே முதலில் உங்களிடம் சொல்வோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.