மாவீரன் படத்தின் டிரைலர் எப்போது... படக்குழு அறிவிப்பு

சென்னை: மாவீரன் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு.

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகிறது. இந்தப் படத்துக்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் மாவீரன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.