லியோ குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய விமர்சனம்

லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறிவருகிறார்கள். அதிலும் குறிப்பாக அனிருத் கூட படத்தை பார்த்துவிட்டு படம் பிளாக் பஸ்டர் என கூறி இருந்தார். அவரை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

இடஙக படத்தை பார்த்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” விஜய் அண்ணாவின் லியோ திரைப்படத்தை பார்த்தேன். படம் அருமையாக இருக்கிறது. அனிருத்துடைய இசை நன்றாக இருக்கிறது. “LCU ” என சூசகமாக குறியீடு கொடுத்துவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார்.

படம் LCU-வா இல்லையா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது இதன் மூலம் படம் கிட்டத்தட்ட LCU தான் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கமாகவே நல்ல படங்களை பார்த்துவிட்டு வெளிப்படையாகவே உதயநிதி தன்னுடைய விமர்சனங்களை கூறிவிடுவார்.

எனவே அவரே லியோ படத்தை பார்த்துவிட்டு படம் அருமையாக இருப்பதாக கூறியுள்ளது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் இன்னும் அதிகமாக்கியுள்ளது.