மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தகவல்!

தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா அடுத்ததாக தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

இந்நிலையில், இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், வேலைக்காரன், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி உள்ளார்.