நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய மோகன்லால்!

தீபாவளியன்று நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் தற்போது தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது சஞ்சய்தத் துபாயில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் துபாயில் அவரை பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் மோகன்லால் தற்போது 'த்ரிஷ்யம் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே துபாயில் இருக்கும் மோகன்லால் நேற்று தீபாவளியன்று நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து அவருக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை கூறினார். சஞ்சய் தத்தும் மோகன்லாலுக்கு தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய்தத், மோகன்லால் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது மோகன்லால் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் போது துபாயில் தான் இருந்தார். அவர் ஐபிஎல் புதிய அணியை வாங்குவதற்காக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.