இசை புயல் இளையராஜா இன்று தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்!

இசையை நண்பனாக மட்டுமல்ல, ஆன்மாவோடும் சேர்த்து வைத்து கொண்டாடியவர்தான் இளையராஜா. அவரின் இசை உணர்வில் மயங்காதவர் எவரும் இருக்க முடியாது என்று அடித்து சொல்லும் அளவிற்கு உணர்வு மிக்க ஒரு இசைக்கலைஞன்.

இளையராஜா அவருடைய 77 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவர் 1976 இல் அன்னக்கிளி படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவரின் அற்புதமான இசையால் இதுவரை 4500 க்கும் மேற்பட்ட பாடல்கள் உருவாகி இருக்கின்றன.

எல்லா கலைஞர்களுமே ஒரு தனிப்பட்ட திறமைகள் வாய்க்கப் பெற்றிருப்பார்கள். ஆனால் இந்தக் கலைஞனனிடம் இருக்கும் அனைத்து வெளிப்பாடுகளுமே மற்றவர்களைவிட மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகத்தான் இருக்கிறது. அத்தகைய தனித்துவம் மிக்க இசையால் இன்று வரை தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது பல மொழி ரசிகர்களையும் கட்டிப் போட்டு இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாக இவருடைய இசையை ரசிப்பதற்கு மொழி என்பது அவசியமே இல்லாத ஒன்று. மொழியே தெரியாத எந்த நாட்டினரும் இவருடைய இசையை கேட்கும்பொழுதே மயங்கி விடும் அளவிற்கு இவருடைய பாடலில் ஒரு புதிய உற்சாகமும், உணர்வும் பொங்கி வழியும்.