ரிலீசுக்கு முன்பே முழு பட்ஜெட்டையும் எடுத்து கொடுத்த நானே வருவேன் படம்

சென்னை: நானே வருவேன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே அப்படம் Table Profit என தெரியவந்துள்ளது. டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், டப்பிங் உரிமை என முழு படத்தின் பட்ஜெட்டையும் ரிலீசுக்கு முன்பே வசூல் செய்து விட்டதாம்.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

வெளிவந்த முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனத்தை நானே வருவேன் பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படம் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்னதாக நானே வருவேன் வெளிவந்தது.

இதனால், கண்டிப்பாக நானே வருவேன் திரைப்படம் வசூலில் அடிவாங்கும் என்றும், படம் நஷ்டமடையவும் பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில், நானே வருவேன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே அப்படம் Table Profit என தெரியவந்துள்ளது. டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், டப்பிங் உரிமை என முழு படத்தின் பட்ஜெட்டையும் ரிலீசுக்கு முன்பே வசூல் செய்து விட்டதாம் நானே வருவேன்.


அதன்பின் திரையரங்கில் வெளியான இப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை மட்டுமே கொடுத்துள்ளதாம். கிட்டத்தட்ட ரூ. 35 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், வசூலின் ஷேர் போக தயாரிப்பாளர் தாணுவிற்கு ரூ. 15 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்று விபரமறிந்த கோலிவுட் வட்டாரங்கள் புள்ளி விபரங்களை தெரிவிக்கின்றன.