நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம்

நயன்தாரா இதில் 15 வயது பெண்ணுக்கு தாயாக வருகிறார். நயன்தாரா கணவராக வினய், தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளனர். இந்த படத்தை அஸ்வின் சரவணன் டைரக்டு செய்துள்ளார்.

இதனை அடுத்து இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இடைவேளை இல்லாமல் ஓடக்கூடிய படமாக இது வருகிறது. இது பற்றி டைரக்டர் அஸ்வின் சரவணன் கூறும்போது, ''கொரோனா ஊரடங்கு பேய் படமாக இது தயாராகி உள்ளது.

நயன்தாராவின் கணவரும், தந்தையும் வெளியே இருக்கும்போது ஊரடங்கு போடப்படுகிறது. இதனால் நயன்தாராவும், அவரது மகளும் மட்டும் வீட்டில் முடங்குகிறார்கள். அப்போது ஒரு பேயிடம் இருவரும் சிக்கிக்கொள்கிறார்கள்.

வெளியில் இருப்பவர்களுடன் வீடியோ காலில் பேசி பிரச்சினையை சொல்கிறார்கள். பேயிடம் இருந்து எப்படி தப்புகிறார்கள் என்பது கதை. இடைவேளை இல்லாமல் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இது தயாராகி இருப்பது ஒரு சிறப்பு அம்சம். 15 வயது பெண்ணுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்றதும் நயன்தாரா உடனே சம்மதித்தார் என அவர் கூறியுள்ளார்.