இப்படிதான் இருக்கணும் என்று சொல்ல தேவை இல்லை... தமன்னா பதிலடி

சென்னை: எனக்கு நானே விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறி முத்த காட்சி, படுக்கை அறை காட்சிகளில் நடித்தேன். 2023 காலகட்டத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்ல தேவை இல்லை என்று தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.

நடிகை தமன்னா சினிமாவில் அறிமுகமான ஆரம்ப கட்டங்களில் முத்தக் காட்சிகளிலும், படுக்கையறைக் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது ஜீ கர்த்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய வெப் சீரியல்களில் முத்தக் காட்சிகளிலும், படுக்கையறைக் காட்சிகளிலும் மிகவும் கவர்ச்சியாகவும் துணிச்சலாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இணையத்தில் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக இப்படி செயல்படலாமா? பணத்துக்காக ஆபாசமாக நடப்பது சரியா?என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு தமன்னா பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து தமன்னா கூறும்போது, “எனது 18 வருட சினிமா வாழ்க்கையில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தது உண்மைதான். அதே முடிவில் இப்போதும் இருக்க வேண்டுமா? என்று யோசித்தேன். இன்னும் வளர வேண்டுமானால் அந்த முடிவை மீற வேண்டும் என்று உணர்ந்தேன்.

அதனால்தான் எனக்கு நானே விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறி முத்த காட்சி, படுக்கை அறை காட்சிகளில் நடித்தேன். 2023 காலகட்டத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்ல தேவை இல்லை. என்னைப்பற்றி நிறைய பேர் கேலி செய்கிறார்கள். அவர்களை நான் கண்டுகொள்ள மாட்டேன்” என்றார்.