விஜய் நெட்வொர்க்கில் இருந்து அடுத்ததாக வருகிறது புதிய சேனல்

ஸ்டார் விஜய் நெட்வொர்க் இசைக்காக ஒரு புதிய சேனலை தமிழில் தொடங்க உள்ளனர். ஸ்டார் விஜய் மியூசிக் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேனல் வரும் 4 ஆம் தேதி பிக் பாஸ் 4 இன் செட்களில் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் பிக்பாஸ் 4 தொடங்க இருக்கிறது. மக்கள் மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டு இருக்கின்றனர். தமிழில் இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறையும் அவரே தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் என்று தெரியாததால், அரசிகர்கள் மிகவும் அவதியில் உள்ளனர்.

பங்கேற்பாளர்கள் யார் என்பதை துடித்துக் கொண்டிருக்கின்றனர். ஷிவானி நாராயணன், நடிகை கிரண் போன்றவர்களின் பெயர்கள் அடிபட்டாலும், முழு பட்டியலும் தெரியவில்லை. இந்நிலையில் கிட்டத்தட்ட ஆறு பேரின் பெயர்கள் கசிந்துள்ளன.

இயக்குனர் அனு மோகன், ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், நடிகைகள் கேப்ரியலா நடாலி சார்ல்டன், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாடகர் ஆஜீதின் பெயரும் அடிபடுகிறது.

ஆஜீத் மற்றும் கேப்ரியலாவை வைத்து காதல் கதையை ஓட்டுவார்கள் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர். போட்டியாளர்களின் பெயர் வெளியீட்டு நிகழ்வில் விஜய் டிவி தனது நேயர்களுக்கு ஒரு ஆச்சர்யத்தை அறிமுகப்படுத்துகிறது. அது என்னவென்றால், ஸ்டார் விஜய் நெட்வொர்க்கில் ஒரு பிரத்யேக திரைப்பட சேனல் விஜய் சூப்பர் என்று ஏற்கனவே உள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது தொடங்கப்பட்டது. ஸ்டார் விஜய் நெட்வொர்க் இசைக்காக ஒரு புதிய சேனலை தமிழில் தொடங்க இருக்கிறார்கள். அந்த சேனலுக்கு ஸ்டார் விஜய் மியூசிக் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேனல் வரும் 4 ஆம் தேதி பிக் பாஸ் 4 இன் செட்களில் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.