டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது சந்தேகம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து துறை விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வீர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளன.

ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலையில் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஓராண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படவில்லை எனில், 2021ஆம் ஆண்டிலும்கூட போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் தொடர்ந்து 3 ஆயிரம் பேர் அல்லது 5 ஆயிரம் பேரை பணியில் வைத்திருக்க முடியாது என்றும், மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடும்போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமற்றது என்றும் தாமஸ் பேக் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது சந்தேகம் தான் என பல்வேறு தரப்புகளில் இருந்து கூறப்படுகிறது.