நடிகை கங்கனாவுக்கு சொந்த கட்டடங்களை இடித்த வழக்கில் நோட்டீஸ்

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்...நடிகை கங்கனா ரணாவத்திற்கு சொந்தமான கட்டடங்களை இடித்து தள்ளிய வழக்கில் மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதற்கும், மும்பை போலீசாரை மாபியாக்கள் என விமர்சித்து டுவிட் செய்தது தொடர்பாக நடிகை கங்கான ரணாவத் மீது மஹாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

கடந்த செப்டம்பரில் கங்கனாவிற்கு சொந்தமான பந்த்ராவில் உள்ள கட்டடங்களை மும்பை மாநகராட்சியினர் விதி மீறல் என கூறி இடித்து தள்ளினர்.

இது தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரில், மாநகராட்சி உயரதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பிய மஹாராஷ்டிரா மாநில மனித உரிமை ஆணையம்ஜன. 20-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் உத்தரவிட்டுள்ளது.