மாமன்னன் படக்குழுவினருக்கு ஓணம் விருந்து... கீர்த்தி சுரேஷ் செம மாஸ் காட்டினார்

சென்னை: ஓணம் விருந்து கொடுத்த கீர்த்தி சுரேஷ்... 'மாமன்னன்' படக்குழுவினருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ், ஓணம் விருந்து கொடுத்து அசத்தியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் பிரபல நடிகை நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மலையாள பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ், உதயநிதி, மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலு உள்ளிட்ட 'மாமன்னன்' படக்குழுவினருக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.