இல்லையாம்... அது வதந்தியாம்: தில் ராஜு தயாரிப்பு படத்தில் சிவகார்த்தி நடிக்கலையாம்

சென்னை: தில் ராஜு தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்றும், இப்படத்தை தெலுங்கு இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளார் எனவும் தகவல் சில தினங்களுக்கு முன்பு பரவியது. ஆனால் அது வதந்தி என்று தெரிய வந்துள்ளது.

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி படங்களை தயாரித்தவர் தில் ராஜு . இவர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில் வாரிசு ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் தில் ராஜுவிடம் நீங்கள் நிறைய தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தில் ராஜுவும் தமிழ் படங்களை தயாரிக்க ஆர்வமாக இருக்கிறார் என பல தகவல் வெளியானது.

இதைதொடர்ந்து தில் ராஜு தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்றும், இப்படத்தை தெலுங்கு இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளார் எனவும் தகவல் சில தினங்களுக்கு முன்பு பரவியது.

இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தெரிய வந்துள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.