வாரிசு படத்தில் குஷ்பு நடித்த புகைப்படங்கள் தற்போது வைரல்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் குஷ்புவும் நடித்துள்ளார். அது வாரிசு படத்தில் வரும் 60-ம் கல்யாண காட்சியாகும். இந்த காட்சியில் குஷ்பு நடித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. இதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் 11-ம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் மாபெரும் வரவேற்புடன் திரையரங்கில் ஓடி கொண்டு இருக்கிறது. இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் குடும்பங்கள் ரசிக்கும் படி இருக்கிறது என படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ்வான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

வாரிசு படம் வெளியான நான்கு நாட்களிலேயே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது. மேலும் பல பிரபலங்கள் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகை குஷ்புவும் உள்ளார். இது வாரிசு படத்தில் வரும் 60-ம் கல்யாண காட்சியாகும். இந்த காட்சியில் குஷ்பு நடித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது. இதை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.