பிரபாஸ்-ன் புதிய ராம் லுக் கவனத்தை ஈர்த்து வருகிறது

ஆந்திரா: பிரபாஸ் தற்போது புதிதாக நடிக்கும் படத்தின் ராம் லுக் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர் பிரபாஸ். இவரது நடிப்பில் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தயாராகி வருகிறது.

இதில் பிரபாஸ் ராமனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ராவணன் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்து, பொம்மை என்று விமர்சிக்கப்பட்டது.

சிலர் நீதிமன்றத்துக்கும் சென்றனர். இந்நிலையில் தற்போது படக்குழு வெளியிட்டுள்ள பிரபாஸின் ராம் லுக் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆரம்பகால விமர்சகர்களும் இந்த தோற்றத்தால் ஈர்க்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 500 கோடி ரூபாய் செலவில் `ஆதிபுருஷ்’ உருவாகி வருவதாக கூறப்படுகிறது.