ஆதிபுருஷ் படத்திற்கு 10000 டிக்கெட்டுக்கள் வாங்குவதாக ராம்சரண் அறிவிப்பு

ஐதராபாத்: 10000 டிக்கெட் வாங்குகிறார்... இயக்குநர் ஓம் ராட் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு 10000 டிக்கெட்களை நடிகர் ராம்சரண் வாங்குவதாக அறிவித்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில், ஓம் ராட் இயக்கத்தில் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்திற்காக 10000 டிக்கெட்களை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் வாங்குவதாக அறிவித்துள்ள நிலையில், மேலும் 10000 டிக்கெட்களை தெலுங்கு நடிகர் ராம்சரண் வாங்குவதாக அறிவித்துள்ளார்.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராமனாக பிரபாஸும், ராவணனாக சயிஃப் அலி கானும், சீதையாக கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர். இந்தப் படம் இந்தியாவெங்கும் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.