அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளத் திரைப்படம் இந்தியில் ரீமேக்!

'அய்யப்பனும் கோஷியும்' என்ற மலையாளத் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இதில் பிரிதிவிராஜ் மற்றும் பிஜூ மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெறும் 5 கோடி பட்ஜெட் செலவில் உருவானது. ஆனால் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது சாதனைப் படைத்தது.

இதையடுத்து இந்த படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பல்வேறு தயாரிப்பாளர்களும் போட்டி போட்டிப்போட்டனர். பின்னர் தமிழில் இந்த படத்தின் ரீமேக்கில் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளி வர துவங்கியது.

இந்த நிலையில் தற்போது, இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அவரே ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும் இன்னொரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூடுதல் விவரங்கள் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்தடுத்து அதன் செய்திகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.