சல்மான்கானின் டைகர் 3 படத்தின் அட்டகாச வசூல் வேட்டை

மும்பை: வசூல் வேட்டை... டைகர் 3 படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வெற்றி திரைப்படங்களில் ஒன்று டைகர். முதல் பாகத்தை தொடர்ந்து வெளிவந்த இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது மூன்றாம் பாகமும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கானுடன் கார்த்ரீனா கைப், எம்ரான் ஹாஸ்மி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஞாயிற்றுக் கிழமை வெளியான இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.

தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ், “ஹிந்தியில் ரூ.43 கோடி (இந்தியாவில் ரூ.52.50 கோடி), வெளிநாடுகளில் ரூ.41.50 கோடி வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.94 கோடி வசூலித்துள்ளது. ஹிந்தி சினிமா வரலாற்றில் தீபாவளிக்கு வெளியான படங்களிலேயே இதுதான் முதலிடம்” எனக் கூறியுள்ளார்கள்.

டைகர் படத்தின் தொடர்களிலும் சரி சல்மான் கான் படங்களிலும் சரி இதான் அதிகபட்ச முதல்நாள் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.