அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் நடிகர் சந்தானம்

அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கிறார் நடிகர் சந்தானம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பிஸ்கோத். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்.அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா ரிலீஸ்க்கு தயாராக உள்ளது .அதனை தொடர்ந்து பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

பாரிஸ் ஜெயராஜ் படத்தின் படப்பிடிப்பை நேற்று முடித்த கையுடன் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அறிவழகன் இயக்கிய வல்லினம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சீனிவாச ராவ் சந்தானம் நடிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மேலும் சந்தானமிற்கு ஜோடியாக அறிமுக நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் ,எம்,எஸ்.பாஸ்கர் மற்றும் சயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெயரிடப்படாத இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்கிறார்.குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் கும்பகோணத்தில் தொடங்கியுள்ளது.

விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.