அசுரன் படத்திற்காக தனுஷ் வருத்திக்கொண்ட காட்சிகள்

சென்னை: அசுரன் படத்திற்காக தன்னை எப்படியெல்லாம் வருத்திக்கொண்டார் தனுஷ் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களை ஆவலுடன் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சுட்டெரிக்கும் மாதத்தில் அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் நடித்த ஒரு காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

அதை திரையில் காட்ட தனுஷை வெற்றிமாறன் எப்படி வேலை வாங்கினார் என்பதை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில், பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்ட அசுரன் திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். படத்தில் தனுஷ் தனது மகனுக்காக வீடு வீடாக சென்று மன்னிப்பு கேட்டு தரையில் விழுந்து வணங்கும் காட்சி உள்ளது. இந்தக் காட்சி எடுக்கப்பட்டபோது வெயில் சுட்டெரிக்கும் மாதம்.

அந்தக் காட்சியை படமாக்கியபோது, தெரு முழுவதும் ஒரு மரம் கூட இல்லை. கடைசி எபிசோடில், தனுஷ் படுத்திருக்கும் கடினமான காட்சியை வெற்றிமாறன் படமாக்கினார். தனுஷை தெரு முழுவதும் போர்வையை விரித்து கீழே விழச் சொன்னார்கள். ஆனால் தனுஷ் மறுத்துவிட்டார். மூன்று கேமராக்கள் மூலம் ஒரே ஷாட்டில் அந்தக் காட்சியை படமாக்கினார்கள்.

அப்போது வெற்றிமாறன் மிகவும் சிரமப்பட்டாலும் இதை தனுஷிடம் தெரிவிக்க முடியவில்லை. இது படத்தின் முக்கியமான கட்டம். தனுஷுக்கு என்னால கஷ்டம் வந்திருக்குமோன்னு கவலைப்பட்டேன், அதையெல்லாம் தாங்கிக்கிட்டு ஒரு நடிகனாக நடித்ததை பார்த்து நெகிழ்ந்தேன்.


அவரைப் போல் வேறு எந்த நடிகராலும் செய்ய முடியாது. அதனால்தான் தனுஷுடன் அடுத்தடுத்து படங்களில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.