நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி அடித்த செம சாதனை

செல்பி அடித்த சாதனை... மாஸ்டர் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி இந்திய நடிகர்கள் எடுத்த செல்ஃபிக்களில் அதிகம் ரீடிவீட் செய்யப்பட்ட செல்ஃபியாக சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் மாஸ்டர், அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடைபெற்றது. அப்போது வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த விவகாரம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய பேசுபொருளாக மாறியது. அப்போது நடிகர் விஜய் பேருந்தின் மீது ஏறி நின்று அவரது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.