படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியானது... விஜய் படக்குழு அதிர்ச்சி

சென்னை : விஜய் நடிக்கும் படத்தின் அடுத்தடுத்த படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், சிலர் அதை ரகசியமாக படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டனர். அப்போது பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளும் சண்டை காட்சி வெளியானது.

சமீபத்தில் விஜய் கோட் சூட் அணிந்து வாரிசு படப்பிடிப்பில் வேலையாட்களுடன் பேசும் படங்களைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் வாரிசு படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் விஜய் மற்றும் ராஷ்மிகா ஜோடியாக நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ரஞ்சிதாமே ரஞ்சிதாமே என தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.


தீபாவளிக்கு பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இணையதளத்தில் வெளியான வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.