சிம்புவின் 46-வது படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.

அதன்படி சிம்புவின் டுவிட்டர் தளத்தில் இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’ஈஸ்வரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிம்பு பாம்பை கையில் வைத்திருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

போஸ்டரில் சிம்பு உண்மையாகவே உடம்பை குறைத்து ஸ்லிம்மாக இருப்பது சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்தாக உள்ளது. அதுமட்டுமன்றி பர்ஸ்ட் லூக் போஸ்டரில் இடம்பெற்றுள்ள 'ஈஸ்வரனின் தாண்டவப்பொங்கல் திரையரங்குகளில்' என்ற வரி பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என்ற தகவலை ரசிகர்களுக்கு தெரித்து உள்ளது.

மேலும் சிம்பு ஜோடியாக இந்த படத்தில் நிதி அகர்வால் நடிக்க இருப்பதையும் எஸ் தமன் இசையமைக்க இருப்பதும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் உறுதி செய்யப்பட்டுள்ளது.