விஜய் படத்துடன் தன் படத்தையும் தில்லுடன் களம் இறக்கும் சிம்பு

விஜய் படத்துடன் சிம்புவின் படமும் பொங்கலுக்கு களம் இறங்குகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா இல்லை தியேட்டரில் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பும், குழப்பமும் விஜய் ரசிகர்களிடையே நீடித்து வருகிறது.

இந்நிலையில், இப்படம் தியேட்டரில் மட்மே வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தை பொங்கல் விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் சிம்பு தனது 'ஈஸ்வரன்' திரைப்படமும் பொங்கலன்று வெளியாக வேண்டும் என்பதில் கறாரா இருக்கிறாராம்.

மாஸ்டர் திரைப்படம் ஏறக்குறைய 1000 தியேட்டர்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. எனவே, ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 15ம் தேதி வெளியாகலாம் என கணிக்கப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படம் வரும்போது நம்ம படம் வேண்டாம் என மற்ற நடிகர்கள் கருதும் நிலையில், சிம்பு எடுத்த தில் முடிவு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.