சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார் ஓட்டும் புகைப்படத்தை டிரெண்டாக்கிய ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து என்ன செய்தி வெளி வந்தாலும் அவை உடனே இந்திய அளவில் டிரெண்ட் ஆகி விடும். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து லம்போர்கினி கார் ஓட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்த ஒரு சில மணி நேரத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து கார் ஓட்டும் இந்த புகைப்படத்தை அவரது அருகில் உள்ள சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிகிறது. இருப்பினும் அவர் எங்கு செல்கிறார் என்பது தெரியவில்லை. ஒரு சிலர் தனது மகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தானே அழைத்துச் செல்வதாக கூறி வருகின்றனர். இன்னும் ஒருசிலரோ அவர் பண்ணை வீட்டிற்கு செல்வதாக கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக டிரைவரை கூட அழைக்காமல் தானே கார் ஓட்டி ரஜினிகாந்த் செல்வதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் எதற்காக காரில் செல்கிறார் என்பது தெரியவில்லை என்றாலும் அவர் கார் ஓட்டும் இந்த ஒரே ஒரு புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இந்திய அளவில் ’லயன் இன் லம்போர்கினி’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நேற்று இரவு முதல் இப்போது வரை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி உள்ளனர்.