வண்டலூர் உயிரியல் பூங்காவில் படப்பிடிப்பு நடத்தும் சூர்யா படக்குழுவினர்

சென்னை: இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்காக படமாக்கப்பட உள்ள காட்சிகளுக்காக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் படக்குழுவினர் இரவில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வேடத்தில் சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இப்படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

சரித்திர கதையில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு நிலவரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதன்படி வனப்பகுதியில் படமாக்கப்பட உள்ள காட்சிகளுக்காக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் படக்குழுவினர் இரவில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.