உங்கள் நம்பிக்கைக்கு நன்றி விஜய் சார்... ட்விட்டரில் பதிவிட்ட இயக்குனர் வம்சி

சென்னை: இயக்குனர் வம்சி ட்விட்டரில் ‘வாரிசு’ கொண்டாட்டம்.. உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே. உங்கள் நம்பிக்கைக்கு நன்றி விஜய் சார் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘வாரிசு’ திரைப்படம் நேரடியாக வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வாரிசு படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். வாரிசு ஃபர்ஸ்ட் லுக் அதிகாலை 4 மணிக்கு வெளியானது. குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம் வாரிசு.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் இயக்குநர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து வம்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ‘வாரிசு’ கொண்டாட்டம்.. உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே. உங்கள் நம்பிக்கைக்கு நன்றி விஜய் சார் என்று தெரிவித்துள்ளார்.