ரசிகர்களுக்கு நன்றி... இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்ட வீடியோ

சென்னை: , ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ப்ளடி ஸ்வீட் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘லியோ’ பாடலுக்கு இசையமைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘லியோ’. தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன் ஆகியோர் லியோ படத்தில் நடித்துள்ளனர்.

சென்னையைத் தொடர்ந்து காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான ‘கைதி’, ‘விக்ரம்’ ஆகிய இரண்டு படங்களின் கதைகளும் ஒரே துறையில் இணைக்கப்பட்டிருப்பது போல் உருவாக்கப்பட்டன. இதற்கு எல்.சி.யு. என ரசிகர்கள் பெயர் சொல்லிக் கொண்டு வரும் நிலையில், விஜய் நடித்த ‘லியோ’ படமும் இந்த பிரபஞ்சத்தில் சேருமா என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வி.

இந்நிலையில் சமீபத்தில் ‘லியோ’ படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ப்ரோமோவில் இடம்பெற்ற பாடலும் பலரை கவர்ந்தது. ஆங்கில வரிகளுடன் அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ப்ளடி ஸ்வீட் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘லியோ’ பாடலுக்கு இசையமைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.