ஹிப்ஹாப் ஆதியின் வீரன் படத்தின் 3வது பாடல் நாளை மாலை வெளியீடு

சென்னை: ‘வீரன்’ படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை ரிலீஸ் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் ஆர்க் சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள ‘வீரன்’. இந்த படத்தில் ஆதிராராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து படக் குழுவினர் மற்ற பணிகளில் மும்முரமாக உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘வீரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வீரன் திரைப்படம் வரும் ஜூன் 2 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.