லியோ படத்தின் நடிகையின் முதல் லுக் போஸ்டர் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள ‘லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை த்ரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இதன் இடையில், இன்று வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிற்காக நடிகர் மற்றும் படத்தின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


இதற்கு இடையே, முதல் முறையாக இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படும் நடிகை த்ரிஷாவின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. அப்போஸ்டரில், த்ரிஷா பயத்துடனும் அதிர்ச்சியுடனும் காணப்படுகிறார், த்ரிஷாவை தாக்க முயலும் எதிரியை ஹீரோ தடுக்கையில் இரத்தம் தெறித்தது போல் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷா மீண்டும் இந்த படத்தை இணைந்துள்ளார்கள்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மண்டமாக உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி கொண்டு வருகிறது.