கமலின் தசாவதாரம் படத்தின் பட்ஜெட் ரூ.43 கோடியாம்

சென்னை: நடிகர் கமல் நடித்த தசாவதாரம் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.43 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரூ.100 கோடி வரை வசூல் வேட்டையாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் தசாவதாரம். இப்படத்தில் 10 வேடத்தில் நடித்து மிரட்டிய கமல் ஹாசனை உலக சினிமாவே பாராட்டியது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து அசின், Mallika Sherawat, நெப்போலியன், நாகேஷ், ஜெயப்பிரதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 100 கோடி வசூல் செய்தது. இதுவே கமல் ஹாசனின் திரை வாழ்க்கையில் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படமாகும்.

இந்நிலையில், ரூ. 100 கோடி வசூல் செய்த தசாவதாரம் படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 20 கோடி போட்டுள்ளனர். ஆனால், அதன்பின் கதை நீண்டு கொண்டே போக ரூ. 30 கோடி ஆனதாம்.

அதன்பின் மீண்டும் கதையின் நீளம் காரணமாக இறுதியாக படத்தின் பட்ஜெட் ரூ. 43 கோடியாக உயர்ந்தது என்று அப்படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.