படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட தகவல்... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் செய்த சாதனை குறித்து படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார் மற்றும் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ நேற்று முன்தினம் இணையத்தில் வெளியாகி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், இந்த ப்ரோமோ வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் செய்த சாதனை குறித்து படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.

லியோ ப்ரோமோ வெளியான 24 மணி நேரத்தில் 27 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த பதிவால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்