சிவகார்த்தியின் டாக்டர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடித்த முடிவு

ஊரடங்கு முடிந்த பின் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கும் புதிய படம் டாக்டர். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே எகிறியபடி இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.

யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் படத்தின் படப்பிடிப்புகள் தடைப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் ஊரடங்கு நிறைவடைந்த பின்னர் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்தால் படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.