ராஜராஜ சோழன் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர்

சென்னை: ராஜராஜ சோழனை சைவ மதத்தின் கூட்டில் மட்டுமே அடைக்க முடியாது’ என்று இயக்குநர் மோகன்.ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம், திரௌபதி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன்.ஜி ராஜராஜ சோழன் குறித்து பேசியுள்ளார்.


இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ராஜராஜன் குறித்து பேசியவை பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. வெற்றிமாறன் பேசியதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததால்தான் தற்போதும் தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக விளங்கி வருகிறது என்றார்.

மேலும், ‘நம்மிடம் இருந்து நமது அடையாளங்கள் தொடர்ந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்துவாக அடையாளப்படுத்துகிறார்கள்’ என்று கூறினார்.


வெற்றிமாறனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பல அரசியல் பிரமுகர்கள் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் வந்தனர். இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம், திரௌபதி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன்.ஜி ராஜராஜ சோழன் குறித்து பேசியுள்ளார்.


அவர் கூறுகையில், ‘இடதுசாரி, வலதுசாரி என எந்த படமாக இருந்தாலும் வரவேண்டும்; இந்த படங்கள் மட்டும் தான் வரவேண்டும் என விதிமுறைகள் விதிக்க கூடாது. எல்லா படங்களும் வெற்றி பெறவேண்டும். ராஜராஜ சோழனை சைவ மதத்தின் கூட்டில் மட்டுமே அடைக்க முடியாது.


பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இன்னொரு முறை நுணுக்கமாக கவனித்தால் தெரியும் ராஜராஜ சோழனை இந்து அரசன் என குறிப்பிடுவதற்கு காரணம் தெரியும்’ என்று தெரிவித்தார். மோகன்.ஜி இயக்கத்தில் தற்போது பாகசூரன் என்ற திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.