உலகளவில் ஜப்பான் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.8 கோடியாம்

சென்னை: முதல் நாள் ஜப்பான் படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

கார்த்தியின் 25வது திரைப்படமாக நேற்று ஜப்பான் வெளிவந்தது. ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இப்படத்தை Dream Warrior Pictures தயாரித்து இருந்தனர்.

மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் படுமோசமான வரவேற்பை பெற்று வருகிறது.

கார்த்தியின் கேரியரில் இதுவரை வெளிவந்த படங்களில் சில படங்கள் மட்டும் தான் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அந்த வரிசையில் ஜப்பான் படமும் இணைந்துவிட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில், முதல் நாள் ஜப்பான் படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகளவில் கார்த்தியின் ஜப்பான் படம் முதல் நாள் மட்டுமே ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்து செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.