தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் வரும் நாளை வெளியீடு

சென்னை: 'கேப்டன் மில்லர்' திரைப்படம் 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'கில்லர் கில்லர்' என்ற பாடல் நாளை (22-ந்தேதி) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

'கேப்டன் மில்லர்' திரைப்படம் 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.