கமல்ஹாசனின் 234 வது படத்தின் தோற்ற வீடியோ இந்த தேதி வெளியாகவுள்ளது

கமல்ஹாசன் பிறந்த நாளான வருகிற நவ.7ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் ... நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதற்கு அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி', ஹெச்.வினோத் இயக்கும் படங்களில் நடிக்கிறார்.

இதன் இடையே மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு, அதாவது 37 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகின்றனர்.


இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இதனை அடுத்து ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் 234 வது படமான இதன் முதல் தோற்ற வீடியோ, அவர் பிறந்த நாளான வருகிற நவ.7ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.