அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ்- 4 தொடங்கியது

பிக்பாஸ் 4 வீட்டை சுற்றி காட்டி பிக்பாஸ்-4 சீசனை தொடக்கி வைத்தார் நடிகர் கமல்.

கொரோனா காரணமாக பல மாதங்களாக தள்ளிப்போன பிக் பாஸ் சீசன்-4 தற்போது கோலாகலமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. அந்தவகையில் பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சென்னையிலுள்ள உள்ள ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சி நேற்று சூட்டிங் முடிந்த நிலையில் இன்று தனியார் தொலைக் காட்சி விஜய் டிவியில் 6 மணி அளவில் பிக்பாஸ் சீசன்-4 தொடங்கியது. வழக்கம் போல் அசத்தல் உடையில் கம்பீரமாக நடிகர் கமல் பிக்பாஸ் 4 வீட்டின் ஒவ்வொரு பகுதியாக சுற்றி காண்பித்து ஆரம்பித்து வைத்தார்.

மேலும் ஆஜீத், கேப்ரியலா, சஞ்சனாசிங், கிரண்ரதோட், ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, பாடகர் வேல்முருகன், அபிநயா ஸ்ரீ, ஜித்தன் ரமேஷ், ரியோ, அனுமோகன், சிவானி, விஜே.அர்ச்சனா, ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் உள்கட்டமைப்பு கிச்சன், படுக்கை அறைகள், டைனிங் ஹால், சுற்றுப்புற அமைப்புகள் குளியல் தொட்டி ஆகியவை உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. முதல் நபராக ரியோ வீட்டுக்குள் சென்றார். இதில் ஆடியன்ஸ் இல்லாமல், கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவித்து ஆரம்பிக்கப்பட்டது.